/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.44 லட்சத்தை வட்டியுடன் திருப்பி தர கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு ரூ.44 லட்சத்தை வட்டியுடன் திருப்பி தர கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு
ரூ.44 லட்சத்தை வட்டியுடன் திருப்பி தர கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு
ரூ.44 லட்சத்தை வட்டியுடன் திருப்பி தர கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு
ரூ.44 லட்சத்தை வட்டியுடன் திருப்பி தர கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு
ADDED : மே 31, 2025 03:14 AM
சென்னை:சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, தையூர் கிராமத்தில், அக் ஷயா நிறுவனம் சார்பில், 'டுடே' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.
அதில் வீடு வாங்க, சந்திரமவுலி அனந்தசுவசமி என்பவர், 44.49 லட்சம் ரூபாயை செலுத்தினார்.
இதற்காக, 2013ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், 2016ல் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதி அளித்து இருந்தது.
ஆனால், குறிப்பிட்ட கால வரம்பில் கட்டுமான பணிகள் முடிக்கப்படாததால், ஒப்பந்தத்தை ரத்து செய்து பணத்தை திருப்பித்தரும்படி, சந்திரமவுலி கோரினார்.
இதற்கு கட்டுமான நிறுவனம் உடன்படாததால், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில், சந்திரமவுலி முறையிட்டார்.
இந்த மனுவை விசாரித்த, ரியல் எஸ்டேட் ஆணையத்தின் தலைவர் ஷிவ் தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கட்டுமான நிறுவனம், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில், வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது.
எனவே, மனுதாரர் செலுத்திய, 44.49 லட்ச ரூபாயை, 30 நாட்களுக்குள், வட்டியுடன் கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.