/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளியில் கூடுதல் வகுப்பறை இம்மாதம் திறக்க முடிவு பள்ளியில் கூடுதல் வகுப்பறை இம்மாதம் திறக்க முடிவு
பள்ளியில் கூடுதல் வகுப்பறை இம்மாதம் திறக்க முடிவு
பள்ளியில் கூடுதல் வகுப்பறை இம்மாதம் திறக்க முடிவு
பள்ளியில் கூடுதல் வகுப்பறை இம்மாதம் திறக்க முடிவு
ADDED : ஜூன் 13, 2025 12:24 AM
சென்னை, ''ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 11.15 கோடி ரூபாயில் கட்டப்படும் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டடம், இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 11.15 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை, அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டார்.
பின், பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:
இப்பள்ளியில் தற்போது, 1,070 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்தாண்டு, 170 மாணவர்கள் பிளஸ் 2 உயர் கல்விக்கு சென்றுள்ளனர். இப்பள்ளிக்கு ஏற்கனவே, 1.78 கோடி ரூபாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிக்காக, 11.15 கோடி ரூபாயில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வசதிகளுடன், 32 வகுப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், ஐந்து ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள், இக்கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.