/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சைபர் குற்றங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் குற்றங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சைபர் குற்றங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சைபர் குற்றங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சைபர் குற்றங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 24, 2025 11:52 PM

சென்னை :சென்னையில் உள்ள மால்களில், ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும், சைபர் குற்றங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கமிஷனர் அருண் உத்தரவின்படி நடந்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் - சென்னை கிறிஸ்துவக் கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து, அண்ணாநகர் வி.ஆர்.,மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது, டிஜிட்டல் மோசடிகள், ஆன்லைன் முதலீட்டு மோசடி, கடன் செயலி மோசடி, பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், வினாடி வினா, பிளாஷ் மாப் நடனத்தில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும், ஏதேனும் சைபர் மோசடியில் சிக்கினால் உடனடியாக, 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கவும் வலியுறுத்தினர்.