/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோயம்பேடு சந்தையில் சுற்றித்திரியும் மாடுகள் * வியாபாரிகள், நுகர்வோர் அவதி கோயம்பேடு சந்தையில் சுற்றித்திரியும் மாடுகள் * வியாபாரிகள், நுகர்வோர் அவதி
கோயம்பேடு சந்தையில் சுற்றித்திரியும் மாடுகள் * வியாபாரிகள், நுகர்வோர் அவதி
கோயம்பேடு சந்தையில் சுற்றித்திரியும் மாடுகள் * வியாபாரிகள், நுகர்வோர் அவதி
கோயம்பேடு சந்தையில் சுற்றித்திரியும் மாடுகள் * வியாபாரிகள், நுகர்வோர் அவதி
ADDED : ஜூன் 13, 2025 12:27 AM

கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில் சுற்றித்திரியும் மாடுகளால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் சிரமப்படுகின்றனர்.
சென்னை கோயம்பேடு சந்தையை சுற்றி உள்ள நெற்குன்றம், சின்மையா நகர் உள்ளிட்ட பகுதிகளில், பலர் எருமை மற்றும் பசு மாடுகளை வளர்க்கின்றனர்.
இந்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக வளர்க்காமல், சாலையில் சுற்றித்திரிய விடுகின்றனர்.
கோயம்பேடு சந்தையில் காய்கறி, பூ உள்ளிட்ட குப்பை கழிவுகளை சாப்பிட மாடுகள் சந்தையில் நுழைகின்றன.
இது, வியாபாரிகள் மற்றும் நுகர்வோருக்கு இடையூறாக உள்ளது. சந்தையை சுற்றி உள்ள சாலைகளில், மாடுகள் கூட்டமாக சுற்றி வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
சமீபத்தில், கோயம்பேடு சந்தையில் மின்சாரம் தாக்கி, பசு மாடு ஒன்று உயிரிழந்தது.
எனவே, மாடுகள் உலா வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; மாடு உரிமையாளர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
***