/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கார், ரூ.13.50 லட்சம் மோசடி: தம்பதி கைது கார், ரூ.13.50 லட்சம் மோசடி: தம்பதி கைது
கார், ரூ.13.50 லட்சம் மோசடி: தம்பதி கைது
கார், ரூ.13.50 லட்சம் மோசடி: தம்பதி கைது
கார், ரூ.13.50 லட்சம் மோசடி: தம்பதி கைது
ADDED : மே 25, 2025 12:12 AM
எஸ்பிளனேடு :ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் பீர் அனீஸ்ராஜா, 48. இவர், 'சன்லைட் வேர்ல்டு' என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், 2023ல் தீவுத்திடலில் பொருட்காட்சி நடத்தினார்.
அப்போது, பழைய கார்களை வாங்கி விற்கும் ஹாஜிரா, 33, மற்றும் அவரது கணவர் அக்பர் ஹுசைன், 35, ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். அவர்கள், 'மை கார்ஸ்' என்ற நிறுவனம் வைத்துள்ளனர். சொகுசு கார்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக பீர் அனீஸ்ராஜாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பியவர், 2023ம் ஆண்டு டிசம்பரில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து, 'மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., 700' காரை வாங்கினார்.
இந்த நிலையில், வாங்கி குறைந்த நாட்களே ஆன 'இசுசு எம்யூ7' கார் வந்திருப்பதாக, கடந்தாண்டு தம்பதி கூறியுள்ளனர்.
இதையடுத்து, தம்பதி கேட்ட 13.50 லட்சம் ரூபாய் கொடுத்து, கார் வாங்கி உள்ளார். ஆனால், கார் பீர் அனீஸ் ராஜாவின் பெயருக்கு மாற்றம் செய்து தராமல், ஓராண்டாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 23ம் தேதி, 'இசுசு எம்யூ7' காரை சர்வீஸ் செய்து தருவதாக திரும்ப பெற்று கொண்ட தம்பதி, காரை ஒப்படைக்காமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் தலைமறைவாகினர்.
இது குறித்த புகாரின்படி எஸ்பிளனேடு போலீசார் விசாரித்து, சூளை, கந்தப்பா தெருவைச் சேர்ந்த ஹாஜிரா, அக்பர் ஹுசைன் ஆகியோரை கைது செய்தனர்.