/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இரவு நேர மின் தடையை சமாளிக்க போதிய ஊழியர் இல்லை கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு இரவு நேர மின் தடையை சமாளிக்க போதிய ஊழியர் இல்லை கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
இரவு நேர மின் தடையை சமாளிக்க போதிய ஊழியர் இல்லை கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
இரவு நேர மின் தடையை சமாளிக்க போதிய ஊழியர் இல்லை கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
இரவு நேர மின் தடையை சமாளிக்க போதிய ஊழியர் இல்லை கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 19, 2025 12:44 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டல குழுவின் 34வது கூட்டம், மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினராக, தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் பங்கேற்றார்.
கூட்டத்தில், சாலை பணி உட்பட நிறைவேறிய, 66 தீர்மானங்கள் குறித்தும், வார்டின் அடிப்படை பிரச்னைகள் குறித்தும், கவுன்சிலர்கள் பேசினர்.
சிவகுமார், 1வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: வார்டில், பாதி பேருக்கு பட்டா கிடைக்கவில்லை. தாமரை குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளால், மற்ற எந்த பணிகளும் நடக்கவில்லை. தாழங்குப்பம் தெருக்களில், கழிவுநீர் பிரச்னை உள்ளது. 1 கி.மீ., துாரத்திற்கு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கார்த்திக், 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: கார்கில் நகர் தொடக்கப்பள்ளியில், 320 மாணவர்கள் படிக்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக, சமீபத்தில் துணை முதல்வர் திறந்த சமூக நலக்கூடத்தில் இடம் கேட்டிருந்த நிலையில் தரவில்லை.
மூன்று பூங்காக்களில், தண்ணீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள் இல்லை. பணிகள் முடியாமலே திறக்கப்படுவது ஏன்; இதற்கு அதிகாரிகள் எப்படி 'பில்' வழங்க ஒப்புதல் வழங்குகின்றனர் என தெரியவில்லை.
சாமுவேல் திரவியம், 6வது வார்டு காங்., கவுன்சிலர்: ஜோதி நகர் மின் வாரியத்தில் உதவி பொறியாளர் பணியிடம், மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ளது. இரவு நேர மின் தடையை சமாளிக்க, போதிய பணியாளர் இல்லை.
குடிநீர் வாரிய உதவி பொறியாளர், ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படுகின்றனர்.
கவி.கணேசன், 12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: மின்மாற்றிக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள வேலியில் சுவரொட்டிகள் ஒட்டுவதை, தடுக்க நடவடிக்கை அவசியம். மாநகராட்சியில், துாய்மை பணியாளர் போஸ்டர் கிழிக்கும் பணியை மட்டுமே மேற்கொள்கின்றனர்.
வார்டு பணி, டெண்டர் விபரங்கள் குறித்து, மாதாந்திர அறிக்கை கவுன்சிலர்களுக்கு தர வேண்டும். திருவொற்றியூர் முழுதும், 650 - 750 மின்மாற்றிகள் தேவை உள்ளது.
ஜெயராமன், 4வது வார்டு சி.பி.ஐ.எம்., கவுன்சிலர்:
ராமநாதபுரம் சமூக நல கூடம் கட்டித் திறக்கப்பட்ட நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. மேடான பகுதிக்கு குடிநீர் ஏறுவதில் சிக்கல் உள்ளது. வினியோக நேரம் அதிகரிக்க வேண்டும். சாத்தாங்காடு, ஜோதி நகர் மின்வாரியத்திற்கு உதவி பொறியாளர் கிடையாது.
தனியரசு, தி.மு.க., மண்டலக் குழு தலைவர்: வார்டு, 10, 12 ஆகிய பகுதிகளில் இருந்து 14வது வார்டுக்கு மழைநீர் செல்வதற்கு ஏதுவாக, வடிகால் அமைப்பு கிடையாது. அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
பூங்காவன புரத்தில், சாலை அமைக்கும் பணிக்கு முன்பாக, கழிவுநீர் குழாய் மாற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகளே திட்டப் பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கவுன்சிலர் தொடர்ச்சியாக அப்பணிகளில் குறை இருப்பின் சுட்டிக் காட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும்.