Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 2 இன்ஸ்பெக்டர்கள் போலீஸ்காரருக்கு வெகுமதி

2 இன்ஸ்பெக்டர்கள் போலீஸ்காரருக்கு வெகுமதி

2 இன்ஸ்பெக்டர்கள் போலீஸ்காரருக்கு வெகுமதி

2 இன்ஸ்பெக்டர்கள் போலீஸ்காரருக்கு வெகுமதி

ADDED : ஜூன் 19, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
சென்னை, எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 2018 அக், 14ம் தேதி, 25 வயது இளைஞரிடம் இருவர் பணம் பறித்துவிட்டு, அவ்வழியாக சென்ற பேருந்து முன் தள்ளிவிட்டனர். சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, சுதா ஹோட்டல் காவலாளி விஷ்ணு பகதுார், அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். பின் வழக்கு விசாரணை எழும்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

ஆதாய கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த எழும்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் விசாரித்து, மதுரை முத்து, 28 மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள, 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, மதுரை முத்துவுக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவரது கூட்டாளி விடுவிக்கப்பட்டார்.

சிறப்பாக பணியாற்றி, குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த ஆய்வாளர்கள் கருணாகரன், செந்தில் வடிவு மற்றும் முதல்நிலைக்காவலர் மணிகண்டன் ஆகியோரை கமிஷனர் அருண் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us