Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி, கல்லுாரிகள் திறப்பால் மாநகராட்சி வரி வசூல் 'டல்'

பள்ளி, கல்லுாரிகள் திறப்பால் மாநகராட்சி வரி வசூல் 'டல்'

பள்ளி, கல்லுாரிகள் திறப்பால் மாநகராட்சி வரி வசூல் 'டல்'

பள்ளி, கல்லுாரிகள் திறப்பால் மாநகராட்சி வரி வசூல் 'டல்'

ADDED : ஜூன் 08, 2025 10:18 PM


Google News
சென்னை:சென்னை மாநகராட்சியில், 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரி செலுத்துகின்றனர். நடப்பு நிதியாண்டில், 2,100 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இரண்டு அரையாண்டு வீதம் வரி வசூலிக்கப்படுகிறது. ஏப்., மற்றும் அக்., மாதத்தில் செலுத்தினால், 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதன்படி, இந்த ஆண்டு ஏப்., மாதத்தில், 505 கோடி ரூபாய் வசூலானது. அதுவே, 2024 - 25ம் ஆண்டு, ஏப்., மாதத்தில், 355 கோடி ரூபாய் வசூலானது. அதை விட, 150 கோடி ரூபாய் அதிகமாக வசூலாகி உள்ளது. அதே வேளையில், இம்மாதம் வரி வசூல் மிகவும் குறைந்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளி, கல்லுாரிகள் திறப்பால் கட்டணம், சீருடை, நோட்டு - புத்தகங்கள் வாங்க, பெரும்பாலான பெற்றோர் செலவு செய்வதால், வரி செலுத்துவதை தள்ளி வைத்துள்ளனர்.

இதனால், வணிக நிறுவனங்கள் மற்றும் பல ஆண்டுகள் நிலுவை வைத்துள்ளவர்களிடம் வரி செலுத்த வலியுறுத்தி வருகிறோம். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், நோட்டீஸ், சீல், ஜப்தி போன்ற நடவடிக்கைகளில், தீவிரம் காட்ட முடியவில்லை.

கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 1,900 கோடி ரூபாய் நிர்ணயித்து, 2,020 கோடி ரூபாய் வசூலித்தோம். அதுபோல், இந்த ஆண்டு நிர்ணயித்ததை விட அதிகமாக வசூலாகுமா என்ற சந்தேகம் உள்ளது.

தாமதமின்றி வரி செலுத்தினால், அபராதம் விதிப்பது தவிர்க்கப்படும். இதை உணர்ந்து, வரி செலுத்த மக்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us