ADDED : மார் 17, 2025 11:58 PM

சென்னை, சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை, மேயர் பிரியா தலைமையில், நாளை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை, வரி விதிப்பு மற்றும் நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட்டில், கல்வி மற்றும் நீர்நிலைகள் சீரமைப்பு உள்ளிட்டவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, சென்னை மாநகராட்சியுடன், 2023ல் இணைக்கப்பட்ட பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு உள்ளிட்டவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இதுகுறித்து, மேயர் பிரியா கூறியதாவது:
மாநகராட்சி பட்ஜெட்டில், கடந்தாண்டு போலவே இந்தாண்டும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், கால்வாய்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.