Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முதல்வர் படைப்பகம் கட்டுமான பணி துவக்கம்

முதல்வர் படைப்பகம் கட்டுமான பணி துவக்கம்

முதல்வர் படைப்பகம் கட்டுமான பணி துவக்கம்

முதல்வர் படைப்பகம் கட்டுமான பணி துவக்கம்

ADDED : செப் 02, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
மடிப்பாக்கம்:மடிப்பாக்கத்தில், அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ - மாணவியர் பயனடையும் நோக்கில், 'முதல்வர் படைப்பகம்' அமைப்பதற்கான கட்டுமானப் பணி, நேற்று பூஜையுடன் துவங்கப்பட்டது.

பெருங்குடி மண்டலம், 188வது வார்டு, மடிப்பாக்கத்திற்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகர், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டி, மாநகராட்சி மூலதன நிதி ரூபாய் 4.72 கோடியில், 'முதல்வர் படைப்பகம்' கட்டடம் கட்டும் பணியை, நேற்று காலை சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்.

இது, திறந்தவெளி வாகன நிறுத்தம் வசதியுடன், 2,427 சதுர அடி பரப்பளவில், இரு தளங்களுடன் அமைகிறது. கீழ்தளத்தில் கழிப்பறை, கலந்தாய்வு கூடம், பல்நோக்கு அறைகளும், மேல்தளத்தில், நுாலகம் மற்றும் இணைய வசதியுடன் மின் நுாலகமும் அமையவுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us