/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 7ம் வகுப்பு மாணவியின் பஞ்சாரி மேள அரங்கேற்றம் 7ம் வகுப்பு மாணவியின் பஞ்சாரி மேள அரங்கேற்றம்
7ம் வகுப்பு மாணவியின் பஞ்சாரி மேள அரங்கேற்றம்
7ம் வகுப்பு மாணவியின் பஞ்சாரி மேள அரங்கேற்றம்
7ம் வகுப்பு மாணவியின் பஞ்சாரி மேள அரங்கேற்றம்
ADDED : செப் 02, 2025 02:09 AM

சென்னை:அண்ணா நகரில் உள்ள அய்யப்பன் கோவிலில், 7ம் வகுப்பு மாணவியின் பஞ்சாரி மேள அரங்கேற்றம் நடந்தது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அண்ணா நகர் அய்யப்பன் கோவிலில், 'வாத்ய கலாரத்னா' தேவராஜ் மாரார் மாணவியரின், பஞ்சாரி மேளம் அரங்கேற்றம் நடந்தது.
இதில், சின்மய வித்யாலயா பள்ளி, 7ம் வகுப்பு மாணவி ஸ்ரேஷ்டா-வும் பஞ்சாரி மேளம் வாசித்து அசத்தினார்.
இந்த இசை நிகழ்ச்சியில், கேரளாவில் இருந்து 40க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று, செண்டை, கொம்பு, இலத்தாளம் உள்ளிட்ட வாத்தியங்கள் வாசித்து, செந்நெறி இசை விழாவை அரங்கேற்றினர்.
மரபு மிக்க கேரள இசைச் சடங்கின் ஆன்மிகத் தன்மையையும், ஒழுக்கத்தையும் வெளிப்படுத்திய இந்நிகழ்ச்சி, பக்தர்களாலும் கலை அன்பர்களாலும் பாராட்டுக்களை பெற்றது.