/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.64.63 கோடியில் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவுரூ.64.63 கோடியில் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவு
ரூ.64.63 கோடியில் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவு
ரூ.64.63 கோடியில் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவு
ரூ.64.63 கோடியில் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவு
ADDED : ஜன 29, 2024 01:42 AM
தாம்பரம்,:தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 28.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 389 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள், தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் நடந்து வருகின்றன.
இதில், 303 தார் சாலைகள் மற்றும் 86 சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஐந்து மண்டலங்களில் 34.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 494 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகளில், 436 தார் சாலைகள் மற்றும் 58 சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
இது தவிர, தாம்பரம் மாநகராட்சியில் நடந்துவரும் சாலை பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.