Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பறிமுதல் வாகனங்கள் வரும் 24ம் தேதி ஏலம்-

பறிமுதல் வாகனங்கள் வரும் 24ம் தேதி ஏலம்-

பறிமுதல் வாகனங்கள் வரும் 24ம் தேதி ஏலம்-

பறிமுதல் வாகனங்கள் வரும் 24ம் தேதி ஏலம்-

ADDED : மார் 19, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில், கேட்பாரற்று கிடந்த, 146 இருசக்கர வாகனங்கள், மார்ச் 24ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன. ஏலத்தில், 20ம் தேதி முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.

தாம்பரம் காவல் ஆணையகத்திற்குட்பட்ட, பள்ளிக்கரணை காவல் நிலைய பகுதிகளில், நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 146 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, இந்த வாகனங்கள், மார்ச் 24ம் தேதி, பகிரங்க ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த ஏல விற்பனையில் பங்கேற்போர், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில், மார்ச் 20ம் தேதி காலை 10:00 மணி முதல் 5:00 மணிக்குள், தங்களது அடையாள அட்டை, ஜி.எஸ்.டி., பதிவு எண் ஆதாரங்களுடன், முன்பதிவு கட்டணமாக 500 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே, மார்ச் 24ம் தேதி ஏலக்குழுவினரின் முன்னிலையில் காவல் நிலையத்தில், காலை 10 மணி முதல் நடக்கும் பகிரங்க ஏலத்தில் பங்கேற்கலாம்.

அன்றைய தினமே, ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான முழு தொகையுடன், ஜி.எஸ்.டி.,யும் சேர்த்து செலுத்தி, விற்பனை ஆணை வழங்கப்பட்டவுடன் வாகனத்தை எடுத்து செல்லலாம்.

இந்த தகவலை, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. மேலும் தகவலுக்கு, 94981 00162 எனும் எண்ணை தொடர்புகொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us