Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஹோட்டல் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு

ஹோட்டல் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு

ஹோட்டல் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு

ஹோட்டல் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு

ADDED : ஜன 29, 2024 01:44 AM


Google News
சென்னை:மடிப்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவர் ஜெயமுருகன், 36. கடந்த 2020 நவ., 4ல், 200 அடி ரேடியல் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

மருத்துவமனையில் நவ., 14ல் உயிரிழந்தார். இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், ஜெயமுருகனின் மனைவி ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் நடந்து. வழக்கை விசாரித்த நீதிபதி, 'கவனக்குறைவு, அதிவேகமாக சரக்கு வாகனத்தை இயக்கியதே, விபத்துக்கு பிரதான காரணம்.

எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 32.86 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனிலிமிடெட், மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us