/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 41 மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு 41 மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு
41 மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு
41 மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு
41 மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு
ADDED : ஜூன் 05, 2025 12:21 AM

சென்னை :சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமை, பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் நடக்கிறது.
அந்த வகையில், சென்னை வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறை தீர்க்கும் முகாமில், கமிஷனர் அருண் பங்கேற்றார்.
பொதுமக்கள், 41 பேரிடம் கமிஷனர் மனுக்கள் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க விரைந்து எடுக்க வேண்டும் என, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.