/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீட்டில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி வீட்டில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
வீட்டில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
வீட்டில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
வீட்டில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
ADDED : ஜூன் 05, 2025 12:19 AM
சென்னை, நொளம்பூர் காவல் நிலைய எல்லையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முதல் மாடியில், கணவரை இழந்த, 38 வயது பெண் வசிக்கிறார்.
அதே குடியிருப்பின் மூன்றாவது மாடியில், முகேஷ், 29, என்பவரும் தங்கி உள்ளார். கடந்த மாதம், 29ம் தேதி இரவு, வீட்டில் அந்த பெண் மட்டும் இருந்துள்ளார்.
அப்போது, போதையில் இருந்த முகேஷ், பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இவரின் பிடியில் இருந்து பெண் தப்பிக்க முயன்றதால், முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டி, முகேஷ் தப்பிவிட்டார்.
சம்பவம் குறித்து நொளம்பூர் போலீசார் விசாரித்தனர். காயமடைந்த பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இவரை கத்தியால் வெட்டிய முகேஷ், நொளம்பூர் பகுதியில் உள்ள, தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு வேண்டிய நபர் என கூறப்படுகிறது.
இதனால், வழக்குப்பதிவு செய்வதில் போலீசார் தாமதம் செய்ததாக குற்றச்சாட்டும் உள்ளது. தவிர, பெண்ணிடம் புகார் கொடுக்க வேண்டாம். சமாதானமாக சென்று விடுங்கள் எனவும் அரசியல் கட்சியினர் கூறி உள்ளனர்.
எனினும், அப்பெண் விடாப்பிடியாக இருந்ததால், திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகேஷை தேடி வந்தனர்.
இதனால் அவர், அம்பத்துார் நீதிமன்றத்தில் சரண்அடைந்தார். இவரை, ஒரு நாள் காவலில் எடுத்து, திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.