Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாமதமாக வீடு வழங்கிய நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவு

தாமதமாக வீடு வழங்கிய நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவு

தாமதமாக வீடு வழங்கிய நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவு

தாமதமாக வீடு வழங்கிய நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவு

ADDED : மே 25, 2025 08:26 PM


Google News
சென்னை:'வீட்டை ஒப்படைக்க தாமதித்த கட்டுமான நிறுவனம் செலுத்தப்பட்ட தொகைக்கு, 40 மாதத்துக்கான வட்டியை இழப்பீடாக அளிக்க வேண்டும்' என, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அம்பத்துார் தாலுகா கொரட்டூரில், 'அலயன்ஸ் புராஜக்ட்ஸ்' நிறுவனம் சார்பில் 'ஆர்ச்சிட் ஸ்பிரிங்ஸ்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, கணேஷர் ராஜாமணி, அபர்ணா ராஜகோபாலன் ஆகியோர் இணைந்து வீடு வாங்க, 2015 ஏப்., 30ல் ஒப்பந்தம் செய்தனர்.

இதன்படி வீட்டின் விலையாக பேசப்பட்ட, 2.89 கோடி ரூபாயை அவர்கள் செலுத்தினர். இதையடுத்து, 2017 ஜூன், 30ல் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்து இருந்தது.

ஆனால், இந்த காலகட்டத்தில் கட்டுமான பணிகளை அந்நிறுவனம் முடிக்கவில்லை. இதனால், குறித்த காலத்தில் வீட்டை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து வீடு வாங்க பணம் செலுத்திய கணேஷர் ராஜாமணி, அபர்ணா ராஜகோபாலன் ஆகியோர்

ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். இதை விசாரித்த ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தெரிவித்தபடி, விலையாக பேசப்பட்ட தொகையை அவர் செலுத்தி உள்ளார். இதன் பின் வீட்டின் அளவு, வடிவமைப்பு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனால், 40 மாதங்கள் தாமதமாக அந்நிறுவனம் வீட்டை ஒப்படைத்துள்ளது. மனுதாரர் வீடு வாங்க செலுத்திய தொகைக்கு, 40 மாதங்களுக்கான வட்டியை இழப்பீடாக கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.

மனுதாரர்கள் செலுத்திய தொகைக்கு, ஆண்டு வட்டியாக 9.50 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிட்டு இழப்பீட்டை வழங்க வேண்டும். வழக்கு செலவுக்காக மனுதாரருக்கு, 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us