/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சொத்து தகராறில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது சொத்து தகராறில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது
சொத்து தகராறில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது
சொத்து தகராறில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது
சொத்து தகராறில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது
ADDED : மே 25, 2025 08:26 PM
வடபழனி:கோடம்பாக்கம் புளியூர்புரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் எபினேசர், 41. தந்தை மகிமை பிரிந்து சென்றதால், சேகர் என்பவரை தாய் சாந்தி திருமணம் செய்து கொண்டார். இவரது மகன் சசிகுமார், 36.
எபினேசர், சசிகுமார் இருவரும் ஒரே வீட்டில் குடும்பத்துடன் தங்கி, கட்டட தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காட்டுப்பாக்கத்தில் உள்ள இடத்தை விற்பது தொடர்பாக நேற்று மதியம் பேச்சு நடந்தது. ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால், குடும்பத்துடன் வாடகை வீட்டிற்கு செல்வதாக எபினேசர் கூறியுள்ளார். சசிகுமார் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின், இருவரும் சேர்ந்து கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்திற்கு சென்றனர்.
இடம் விற்பனையில் பணம் கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே, எபினேசர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சசிகுமாரை முகத்தில் வெட்டினார்.
பலத்த காயமடைந்த சசிகுமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வடபழனி போலீசார் வழக்கு பதிந்து, தம்பியை வெட்டிய அண்ணன் எபினேசரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.