/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுவர்களுக்கு 'தொல்லை' சர்ச் ஊழியர் சிக்கினார் சிறுவர்களுக்கு 'தொல்லை' சர்ச் ஊழியர் சிக்கினார்
சிறுவர்களுக்கு 'தொல்லை' சர்ச் ஊழியர் சிக்கினார்
சிறுவர்களுக்கு 'தொல்லை' சர்ச் ஊழியர் சிக்கினார்
சிறுவர்களுக்கு 'தொல்லை' சர்ச் ஊழியர் சிக்கினார்
ADDED : ஜூன் 18, 2025 12:32 AM

அம்பத்துார், அம்பத்துார், மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ், 36. இவர், அம்பத்துாரில் உள்ள சர்ச் ஒன்றில், பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு உதவிகரமாக இருக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார்.
அங்கு, பிரார்த்தனைக்கு வரும் மூன்று சிறுவர்களை மிரட்டி, ஏசுதாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரையடுத்து, அம்பத்துார் மகளிர் போலீசார், நேற்று ஏசுதாஸை பிடித்து விசாரித்தனர்.
இதில், ஏசுதாஸுக்கு ஓரினச்சேர்க்கை மீது ஆர்வம் இருந்துள்ளது. வியாசர்பாடியில் இருந்து பிரார்த்தனைக்கு வந்த சிறுவனை மிரட்டி, அம்பத்துாரில் அறை எடுத்து பாலியல் ரீதியாக துன்றுத்தியுள்ளார்.
இதனிடையே, அந்த சிறுவனுடன் வரும் மற்ற இரண்டு சிறுவர்களையும், ஏசுதாஸ் தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.
இதில், ஏசுதாஸின் வலையில் மூன்றாவதாக சிக்கிய சிறுவன், தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சிடைந்த சிறுவனின் பெற்றோர், அம்பத்துார் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
மகளிர் போலீசார், ஏசுதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.