/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'முதியோருடன் வளரும் குழந்தைகள் போக்சோ பாதிப்பில் சிக்குவதில்லை' 'முதியோருடன் வளரும் குழந்தைகள் போக்சோ பாதிப்பில் சிக்குவதில்லை'
'முதியோருடன் வளரும் குழந்தைகள் போக்சோ பாதிப்பில் சிக்குவதில்லை'
'முதியோருடன் வளரும் குழந்தைகள் போக்சோ பாதிப்பில் சிக்குவதில்லை'
'முதியோருடன் வளரும் குழந்தைகள் போக்சோ பாதிப்பில் சிக்குவதில்லை'
ADDED : ஜூன் 14, 2025 02:38 AM

சென்னை:-சென்னை நந்தனம் சி.ஐ.டி., நகரில், 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' சார்பில், உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், தேசிய அளவிலான அறிக்கையை, தமிழக அரசின் சமூக நலத்துறை இணை இயக்குனர் உமாதேவி வெளியிட்டார்.
முதல் பிரதியை பெற்றுக்கொண்ட, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணைக்கமிஷனர் வனிதா பேசிதாவது:
எல்லாரும் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே எந்தவித புரிதலும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
முதியவர்களை உடன் வைத்து கொள்ளாமல், தனி வீட்டை எடுத்துக்கொடுத்து, அவர்களை பராமரிக்க ஆட்களை வைத்துவிடுகின்றனர். முதியவர்களை வைத்துக்கொள்ளும் சகிப்புத் தன்மை இளைஞர்களுக்கு இல்லை.
தற்போது தற்கொலைகள் அதிகம் நடப்பதற்கு காரணம், எந்த ஒரு இளைஞர்களும் தங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை வெளிப்படையாக, பெரியவர்களிடம் மனம்விட்டு பேசாததால் தான்.
யார் வீட்டில் முதியவர்கள் இல்லையோ, அங்கு தான் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகள் யாரும் போக்சோ வழக்குகளில் சிக்குவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் டேவிட் சுந்தர் சிங், சென்னை புரோபஸ் கிளப் தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.