Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'சென்னை ஒன்' போக்குவரத்து செயலி வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

'சென்னை ஒன்' போக்குவரத்து செயலி வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

'சென்னை ஒன்' போக்குவரத்து செயலி வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

'சென்னை ஒன்' போக்குவரத்து செயலி வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

ADDED : செப் 23, 2025 01:11 AM


Google News
சென்னை:'சென்னை ஒன்' என்ற ஒருங்கிணைந்த பொது போக்குவரத்துக்கான செயலியை நேற்று, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், வாடகை கார், ஆட்டோ போன்ற பொது போக்குவரத்துக்களை இணைக்கும் வகையில், 'சென்னை ஒன்' என்ற பெயரில், மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

'கும்டா' எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு வாயிலாக, இது உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி, ஒரே கியூ.ஆர்., பயணசீட்டு வாயிலாக, ஐ.ஓ.எஸ்., மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் பயன்படுத்தலாம்.

தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கும்டா ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் நேற்று நடந்தது. இதில், 'சென்னை ஒன்' செயலியை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் முத்துசாமி, சேகர்பாபு, சிவசங்கர், ரகுபதி, தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசு நிர்ணயம் செய்த ஆட்டோ கட்டணம் மாயம்

'சென்னை ஒன்' என்ற புதிய செயலியை பயன்படுத்த முயன்ற வர்கள், ஆட்டோ கட்டணத்தில் அதிருப்தி அடைந்துள்ளனர். உதாரணமாக, மடிப்பாக்கத்தில் வசிக்கும் ஒரு நபர், அண்ணா சலையில் உள்ள எல்.ஐ.சி.,க்கு வர, இந்த செயலியில் டிக்கெட் எடுக்க முன்வருகிறார். அதில் மாநகர பேருந்து, மெட்ரோ ஆகியவற்றுக்கான டிக்கெட் கட்டணத்துடன், அவர் வீட்டில் இருந்து மாநகர பேருந்து நிறுத்தம் செல்ல, ஆட்டோவில் செல்லலாம் என்று செயலி பரிந்துரைக்கிறது. ஆட்டோவில் செல்ல முன்வந்தால், 'நம்ம யாத்ரி' என்ற செயலியில் இணைக்கப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே வருகின்றன. இதற்கான கட்டணம், அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு சம்பந்தம் இல்லாத வகையில் அதிகமாக உள்ளது. ஆட்டோ கட்டணத்தை, பயணியர் தனியாக செலுத்த வேண்டும் என்றும் செயலியில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, பயணியர் கூறிய தாவது: தமிழகத்தில், 2013ல் அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணங்கள்தான் தற்போதும் அமலில் உள்ளன. இதை அடிப்படையாக வைத்துதான், ஓலா, ஊபர், ரெபிடோ ஆட்டோக்களில் கட்டணம் வசூல் செய்யப் படுகின்றன. ஆனால், இதற்கு சம்பந்தம் இல்லாத வகையில் அதிக கட்டணம், 'சென்னை ஒன்' செயலியில் இடம் பெற்றுள்ளது. அரசு உருவாக்கிய செயலியில், அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்ட ணம் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us