/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்ட்ரல் வணிக வளாகம் முதல்வர் ஆலோசனை சென்ட்ரல் வணிக வளாகம் முதல்வர் ஆலோசனை
சென்ட்ரல் வணிக வளாகம் முதல்வர் ஆலோசனை
சென்ட்ரல் வணிக வளாகம் முதல்வர் ஆலோசனை
சென்ட்ரல் வணிக வளாகம் முதல்வர் ஆலோசனை
ADDED : ஜூன் 03, 2025 12:32 AM
சென்னை, சென்ட்ரலில், 27 மாடிகளுடன் அமைய உள்ள வணிக வளாகத்தின் வடிவமைப்பு மாற்றம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைம் அருகே, 27 மாடிகளுடன், 120 மீட்டர் உயரத்திற்கு, 546 கோடி ரூபாயில், பிரமாண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இந்தாண்டு பிப்ரவரியில், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மெட்ரோ ரயில் சொத்து மேலாண்மை நிறுவனத்திற்கு, இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான கட்டட வடிவமைப்பு கலையம்சம் இன்றி உள்ளதாக புகார் எழுந்ததால், வடிவமைப்பு மாற்றப்படும் என, அரசு அறிவித்தது.
வடிவமைப்பு மாற்றம் தொடர்பாக, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், தலைமை செயலர் முருகானந்தம், சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் சித்திக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பத்து நாட்களில் கட்டட வடிவமைப்பு இறுதி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.