/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து
கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து
கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து
கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து
ADDED : செப் 19, 2025 12:37 AM

ஆலந்துார்,
வானகரம், நுாம்பல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் தர்மராஜ், 53. இவர், நேற்று கிண்டியில் இருந்து போரூர் நோக்கி, தனது 'மாருதி சுசுகி பிரான்ஸ்' காரில் புறப்பட்டார். கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது, திடீரென மயக்கம் ஏற்பட்டது.
இதனால், கார் கட்டுப் பாட்டை இழந்து, பக்க வாட்டு சுவர் மீது கார் மோதி கவிழ்ந்தது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள், காரில் லேசான காயங்களுடன் இருந்த அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கவிழ்ந்த காரை மீட்டு, போக்குவரத்தை சீர்செய்தனர்.
இந்த விபத்து குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.