ADDED : ஜூன் 15, 2025 12:35 AM
எண்ணுார், கால் இடறி, கடலில் விழுந்த சிறுவன் அலையில் சிக்கி மாயமானார்.
எர்ணாவூர், ஜெய்ஹிந்த் நகர், சன்னதி தெருவைச் சேர்ந்த பரத், 17, பத்தாம் வகுப்பு முடித்து, தனியார் ஐ.டி.ஐ., படித்தார். இந்நிலையில், நேற்று மாலை தன் நண்பர்களுடன் சேர்ந்து, எண்ணுார், நெட்டுக்குப்பம் துாண்டில் வளைவு பகுதிக்கு சென்றார்.
அங்கு கடலில் கால் நனைக்க வார்ப்பு பகுதி வழியாக இறங்கியுள்ளார். அப்போது கால் இடறி உள்ளே விழுந்த நிலையில், அலையில் சிக்கி மாயமானார்.
இது குறித்து தகவல் அறிந்த எண்ணுார் போலீசார், மீனவர்கள் உதவியுடன் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.