ADDED : மே 25, 2025 08:18 PM
ராயபுரம்:சென்னை, ராயபுரம், எஸ்.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் கலீத், 48. கடந்த 22ம் தேதி இரவு கலீத் அவரது பேஷன் புரோ இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்தபோது, இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்றது தெரிந்தது.
கலீத் கொடுத்த புகாரின்படி ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, ராயபுரம், பனைமரத்தொட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத், 32, என்பவரை நேற்று கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.