ADDED : மார் 18, 2025 12:39 AM
வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தில் உள்ள, சவுமிய தாமோதர பெருமாள் கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இக்கோவிலில் இந்தாண்டு, ஸ்ரீ ராமநவமி திருவிழாவை முன்னிட்டு, உ.வே.கிடாம்பி நாராயணன் சுவாமி தலைமையில், ராமாயண உபன்யாசம், கோவில் வளாகத்தில் நேற்று மாலை துவங்கியது.
முதல் நாளான நேற்று, ஸ்ரீ ராமஜனனம் சொற்பொழிவு நடந்தது. இன்று சீதாவிவாகம், நாளை குகசஹ்யம், நாளை மறுநாள் ஸ்ரீ பாதுகா பட்டாபிஷேகம் உள்ளிட்ட தலைப்புகளில், 28ம் தேதி வரை சொற்பொழிவு நடைபெறுகிறது.
இதில், 21 - 23ம் தேதிகளில் தவன உற்சவம் நடப்பதால், சொற்பொழிவு இல்லை. தினமும் மாலை, 7:00 - 8:15 மணி வரை நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவத்துள்ளது.