/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அண்ணா பல்கலை டென்னிஸ் சாய்ராம் கல்லுாரி முதலிடம் அண்ணா பல்கலை டென்னிஸ் சாய்ராம் கல்லுாரி முதலிடம்
அண்ணா பல்கலை டென்னிஸ் சாய்ராம் கல்லுாரி முதலிடம்
அண்ணா பல்கலை டென்னிஸ் சாய்ராம் கல்லுாரி முதலிடம்
அண்ணா பல்கலை டென்னிஸ் சாய்ராம் கல்லுாரி முதலிடம்
ADDED : செப் 20, 2025 04:08 AM
சென்னை,அண்ணா பல்கலையின் நான்காவது மண்டல டென்னிஸ் போட்டியில், சாய்ராம் கல்லுாரி முதலிடத்தை பிடித்தது.
அண்ணா பல்கலையின் நான்காவது மண்டல டென்னிஸ் போட்டி, காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது.
போட்டியில், நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட ஏராளமான கல்லுாரி அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில், சாய்ராம் கல்லுாரி அணி, 2 - 1 என்ற செட் கணக்கில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் அணியை தோற்கடித்தது.
மற்றொரு அரையிறுதி யில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை கல்லுாரி அணி, 3 - 0 என்ற செட் கணக் கில் தாகூர் பொறியியல் கல்லுாரி அணியை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில், சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணி, 3 - 0 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை கல்லுாரி அணியை வீழ்த்தி முதலிடத்தை கைப்பற்றியது.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணி, 3 - 0 என்ற செட் கணக்கில் தாகூர் கல்லுாரி அணியை தோற்கடித்து கைப்பற்றியது.