ADDED : செப் 20, 2025 04:08 AM
வியாசர்பாடி, வியாசர்பாடியில், வீட்டின் பீரோவில் இருந்த 66 சவரன் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வியாசர்பாடி, பி.பி.சாலையைச் சேர்ந்தவர் தீபிகா, 34. இவர், தன் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த இரு மாதங்களாக, அருகில் உள்ள பெரியம்மா வீட்டில் வசித்து வந்தார்.
தீபிகா தன் 66 சவரன் தங்க நகைகளையும், பெரியம்மாவின் வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். இந்நிலையில், பீரோவில் இருந்த 66 சவரன் நகைகள் மாயமாகின.
இது குறித்து வியாசர்பாடி போலீசில் தீபிகா புகார் அளித்தார். அதில், 'பெரியம்மாவின் மகன் விமல்குமார், 66 சவரன் தங்க நகைளை திருடியதோடு, அதை விற்று பணத்தை செலவழித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விசாரித்த வியாசர்பாடி போலீசார், தலைமறைவாக உள்ள விமல்குமாரை தேடி வருகின்றனர்.