/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னையில் நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற ஆந்திர எம்.பி., மகள் கைதுசென்னையில் நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற ஆந்திர எம்.பி., மகள் கைது
சென்னையில் நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற ஆந்திர எம்.பி., மகள் கைது
சென்னையில் நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற ஆந்திர எம்.பி., மகள் கைது
சென்னையில் நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற ஆந்திர எம்.பி., மகள் கைது
UPDATED : ஜூன் 18, 2024 06:28 PM
ADDED : ஜூன் 18, 2024 05:22 PM

சென்னை: சென்னையில் நடைபாதையில் தூங்கிக் கொண்டு இருந்த இளைஞர் மீது காரை ஏற்றி கொன்றவர் ஆந்திர எம்.பி.,யின் மகள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்
சென்னை பெசன்ட் நகர், டைகர் வரதராச்சாரி சாலையோரமாக பிளாட்பாரத்தில் சிலர் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஊரூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா(22) என்பவர் மீது ஏறியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்து விட்டார்.
விபத்தை பார்த்ததும் மக்கள் அந்த காரை மறிக்க முயன்றனர். காரில் இருந்த இரண்டு பெண்களும், காருடன் தப்பிச் சென்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். காரில் பெண்கள் இருந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறினர்.
விபத்தை ஏற்படுத்தியவர் ஆந்திராவின் ஓய்எஸ்ஆர் காங்., ராஜ்யசபா எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என தெரியவந்துள்ளது. சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் பீடா மஸ்தான், புதுச்சேரியில் தொழில் செய்து வருகிறார். இதனையடுத்து பீடா மாதுரியை போலீசார் கைது செய்தனர்.