ஆடிக்கொண்டே சரிந்து விழுந்து உயிரை விட்ட மணமகள்: திருமண விழாவில் சோகம்
ஆடிக்கொண்டே சரிந்து விழுந்து உயிரை விட்ட மணமகள்: திருமண விழாவில் சோகம்
ஆடிக்கொண்டே சரிந்து விழுந்து உயிரை விட்ட மணமகள்: திருமண விழாவில் சோகம்
ADDED : ஜூன் 18, 2024 05:45 PM

டேராடூன்: உத்தரகண்டில் திருமண விழாவின் போது மணமகள் ஸ்ரேயா சந்தோஷத்தில் நடனம் ஆடிய போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் திருமண விழாவில் மணமகள் ஸ்ரேயா (வயது 28) சந்தோஷத்தில் நடனம் ஆடியுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். மணமகளை மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.
ஸ்ரேயா உயிரிழந்து விட்டதாக டாக்டர் கூறியதும், மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதயம் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் உயிரிழந்திருக்கலாம் என டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளார். மணமகள் ஸ்ரேயா டில்லியை சேர்ந்தவர். மணமகனும் அவரது குடும்பத்தினரும் லக்னோவைச் சேர்ந்தவர்கள்.
ஸ்ரேயாவின் தந்தை கூறியதாவது: என் மகள் எம்.பி.ஏ., படித்துள்ளார். மணமகன் லக்னோவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருமண விழாவில் மகள் நடனம் ஆடி கொண்டு இருந்தார். அப்போது சரிந்து விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு அவர் கூறினார்.