/உள்ளூர் செய்திகள்/சென்னை/விடுமுறை நாளில் முரண்பாடு 405 நிறுவனங்கள் மீது நடவடிக்கைவிடுமுறை நாளில் முரண்பாடு 405 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விடுமுறை நாளில் முரண்பாடு 405 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விடுமுறை நாளில் முரண்பாடு 405 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விடுமுறை நாளில் முரண்பாடு 405 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜன 28, 2024 12:21 AM
சென்னை, சென்னையில், தேசிய விடுமுறை நாளில் தொழிலாளர்களை பணியமர்த்தி, முரண்பாடில் ஈடுபட்ட 405 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து, தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் விமலநாதன் கூறியதாவது:
தேசிய விடுமுறையான குடியரசு தினத்தன்று, கடைகள், நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில், தங்கள் சம்மதத்துடன் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, தொழிலாளர் நலத்துறை சென்னை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி சிறப்பாய்வு செய்ய அறிவுறுத்தினார்.
இதையடுத்து, சென்னை, 1, 2 மற்றும் 3ம் வட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர்கள், துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டங்களின் கீழ், 520 நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.
இதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 405 நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வழங்கி,
மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.