Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அது எல்லாம் பரம ரகசியம்: சொல்கிறார் ராமதாஸ்!

அது எல்லாம் பரம ரகசியம்: சொல்கிறார் ராமதாஸ்!

அது எல்லாம் பரம ரகசியம்: சொல்கிறார் ராமதாஸ்!

அது எல்லாம் பரம ரகசியம்: சொல்கிறார் ராமதாஸ்!

UPDATED : ஜூன் 08, 2025 02:31 PMADDED : ஜூன் 08, 2025 02:27 PM


Google News
Latest Tamil News
சென்னை: அன்புமணி உடன் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ''அது எல்லாம் பரம ரகசியம். அதை சொல்லக்கூடாது'' என்றார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: நான் சொல்வதற்கு முக்கியமான செய்திகள் ஏதுமில்லை. அதுமட்டுமல்ல நல்ல செய்திகள் உங்கள் வாழ்த்துகளுடன் விரைவில் வரும். நீங்களும், நானும் காத்திருக்கலாம்.

இதுவரை 25 வியாழக்கிழமை நிருபர்களை சந்தித்து இருக்கிறேன். அரசியலுக்கு வயது கிடையாது. கருணாநிதி 94 வயது வரைக்கும், சக்கர நாற்காலியில் இருந்தபடியே முதல்வராக இருந்தார். மலேசியாவில் 92 வயதுடைய மகாதீர் பிரதமராக இருந்தார். அதனால், அரசியலுக்கு வயது கிடையாது. அது வெறும் நம்பர்.

விரைவில் நல்ல செய்தி வரும். ஆனால் எங்கிருந்து வரும் என்று எனக்குத் தெரியாது. இங்கு இருந்து வருமா, தோட்டத்தில் இருந்து வருமா என்று தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

நெருங்கிய நண்பர்

அமித்ஷா தமிழகம் வருகை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ராமதாஸ் அளித்த பதில்: நான் எல்லா தலைவர்களையும் நேசிப்பவன். பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் சந்தித்தது இல்லை. அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு செல்ல பிரதமரும், உள்துறை அமைச்சரும் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பா.ம.க., தொண்டர்களுக்கு சோர்வு வராது. ராமதாசுக்கு 86 வயது ஆகிவிட்டது. இனி என்ன செய்ய முடியும் என்று சிலர் கிசுகிசுப்பதாக செய்தி. அதனால் தான் வயதைப் பற்றி பேசுகிறேன்.

கூட்டணி யாரோடு, எப்போது, ஏன் என்ற கேள்விக்கு எல்லாம் இப்பொழுது சொல்ல முடியாது. அது இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் தெரியவரும். அப்போது நீங்களும் இருப்பீர்கள். அப்போது பல கேள்விகளை கேட்க காத்து கொண்டு இருங்கள். கூட்டணி குறித்து உங்கள் ஆலோசனையை சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஜோசியம் படித்திருப்பேன்!

விஜய் தேர்தலை சந்திக்க உள்ளார் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''கட்சி யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். அவர் கட்சி தொடங்கி இருக்கிறார். அவருக்கு அப்போதும் வாழ்த்து கூறினேன். இப்போதும் வாழ்த்து சொல்கிறேன். எனக்கு ஜோசியம் தெரியாது. அப்படி ஒரு படிப்பு இருந்தது தெரிந்து இருந்தால் டாக்டருக்கு பதிலாக படித்து இருப்பேன்'' என ராமதாஸ் பதில் அளித்தார்.

பரம ரகசியம்

அன்புமணி உடன் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ''அது எல்லாம் பரம ரகசியம். ரகசியத்தை சொல்ல கூடாது'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us