/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிதிலமடைந்த 100 அடி சாலை வாகன ஓட்டிகள் தினமும் தவிப்புசிதிலமடைந்த 100 அடி சாலை வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
சிதிலமடைந்த 100 அடி சாலை வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
சிதிலமடைந்த 100 அடி சாலை வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
சிதிலமடைந்த 100 அடி சாலை வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
ADDED : ஜன 05, 2024 01:04 AM

திருமங்கலம், சிதிலமடைந்த திருமங்கலம் 100 அடி சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அண்ணா நகர் மண்டலம், 99வது வார்டு பகுதியில், திருமங்கலம் 100 ஆடி சாலை உள்ளது.
இந்த சாலையில், பாடி மேம்பாலத்தில் இருந்து, கோயம்பேடை நோக்கிச் செல்லும் பாதையும், கோயம்பேடில் இருந்து பாடியை நோக்கிச் செல்லும் பாதையும் உள்ளன.
நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இந்த சாலையில், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு, பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது.
இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையம் அருகில், சாலை முழுதும் சிதிலமடைந்து உள்ளது. அதேபோல், பள்ளி சாலையின் இணைப்பு பகுதிகளில் பல்லாங்குழியாக உள்ளது. தற்போது, இந்த பகுதியில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
அத்துடன் பள்ளங்களால், மேலும் நெரிசல் ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இச்சாலையில், பள்ளம் ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைக்க வேண்டும்.
ஆனால் பள்ளங்களை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து, உயிர்பலி ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இதே இடத்தில் தொடர்ந்து, இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.