/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி அருகில் குட்கா விற்பனை கண்ணகி நகரில் 6 கடைக்கு 'சீல்' பள்ளி அருகில் குட்கா விற்பனை கண்ணகி நகரில் 6 கடைக்கு 'சீல்'
பள்ளி அருகில் குட்கா விற்பனை கண்ணகி நகரில் 6 கடைக்கு 'சீல்'
பள்ளி அருகில் குட்கா விற்பனை கண்ணகி நகரில் 6 கடைக்கு 'சீல்'
பள்ளி அருகில் குட்கா விற்பனை கண்ணகி நகரில் 6 கடைக்கு 'சீல்'
ADDED : செப் 10, 2025 12:38 AM

கண்ணகி நகர்,பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு, உணவு பாதுகாப்பு துறையினர் 'சீல்' வைத்தனர்.
கண்ணகி நகர், எழில் நகரில் அரசு நடுநிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இதன் அருகில் உள்ள பெட்டி கடைகளில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதை வாங்கி, மாணவர்கள் பயன்படுத்துவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் தலைமையிலான குழுவினர் மற்றும் கண்ணகி நகர் போலீசார் இணைந்து, கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், 6 கடைகளில் இருந்து, 4 கிலோ ஹான்ஸ், ஒரு கிலோ கூலிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆறு கடைகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
மேலும், முதல் முறையாக புகையிலை வைத்திருந்த நான்கு கடைகளுக்கு, தலா 25,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக புகையிலை விற்ற இரண்டு கடைகளுக்கு, தலா 50,000 ரூபாய் வீதம் மொத்தம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.