/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.3 கோடி மதிப்பு கஞ்சா கடத்திய 6 பேர் கைது ரூ.3 கோடி மதிப்பு கஞ்சா கடத்திய 6 பேர் கைது
ரூ.3 கோடி மதிப்பு கஞ்சா கடத்திய 6 பேர் கைது
ரூ.3 கோடி மதிப்பு கஞ்சா கடத்திய 6 பேர் கைது
ரூ.3 கோடி மதிப்பு கஞ்சா கடத்திய 6 பேர் கைது
ADDED : செப் 02, 2025 02:22 AM

திருவள்ளூர்;ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட மூன்று கோடி ரூபாய் கஞ்சா, கும்மிடிப்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் இருந்த சரக்கு வாகனம் வாயிலாக, தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனம் ஒன்றையும், அதை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்றையும் நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில், சரக்கு வாகனத்தில் 590 கிலோ கஞ்சா பண்டல்கள் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, ௩ கோடி ரூபாய்.
சரக்கு வாகனம் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், தஞ்சாவூர், புதுக்கோட்டை அடுத்த அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ராமநாதன், 35, உட்பட்ட ஆறு பேரை கைது செய்தனர்.