/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விடுமுறைக்காக 2,470 சிறப்பு பஸ்கள் இயக்கம் விடுமுறைக்காக 2,470 சிறப்பு பஸ்கள் இயக்கம்
விடுமுறைக்காக 2,470 சிறப்பு பஸ்கள் இயக்கம்
விடுமுறைக்காக 2,470 சிறப்பு பஸ்கள் இயக்கம்
விடுமுறைக்காக 2,470 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : செப் 04, 2025 03:37 AM
சென்னை, மீலாது நபி மற்றும் வார விடுமுறை நாட்களுக்காக 2,470 சிறப்பு பேருந்துகளை இயக்கும் வகையில், அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் வெளியிட்ட அறிக்கை:
இன்று சுபமுகூர்த்த நாள், நாளை மீலாது நபி, வரும் 6, 7ல் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்றும், நாளையும் 1,115 பேருந்துகள்; அதேபோல், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து 130 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை திரும்ப வசதியாக, வரும் 7ம் தேதியில் 875 பேருந்துகளையும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார இறுதியில் பயணிக்க 41,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.