Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் 2 ரயில்கள் ரத்து

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் 2 ரயில்கள் ரத்து

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் 2 ரயில்கள் ரத்து

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் 2 ரயில்கள் ரத்து

ADDED : செப் 04, 2025 03:37 AM


Google News
சென்னை, ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளையும், 7ம் தேதியிலும் இரண்டு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:

பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு இரவு 11:20 மணி ரயில் நாளையும், 7ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரலுக்கு இரவு 9:25 மணி ரயில் நாளையும், 7ம் தேதியிலும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us