/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கடற்கரை - வேளச்சேரி தடத்தில் 24 ரயில்கள் ரத்து கடற்கரை - வேளச்சேரி தடத்தில் 24 ரயில்கள் ரத்து
கடற்கரை - வேளச்சேரி தடத்தில் 24 ரயில்கள் ரத்து
கடற்கரை - வேளச்சேரி தடத்தில் 24 ரயில்கள் ரத்து
கடற்கரை - வேளச்சேரி தடத்தில் 24 ரயில்கள் ரத்து
ADDED : மே 17, 2025 12:20 AM
சென்னை :சென்னை கடற்கரை பணிமனையில் புதிய நடைமேம்பாலம் கட்டும் பணி, இன்று இரவு 10:00 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை 8:00 மணி வரை நடக்கிறது. இதனால், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இன்று ரத்து: வேளச்சேரி - கடற்கரை இரவு 9:00, 9:40, 10:20 மணி, கடற்கரை - வேளச்சேரி இரவு 10:20 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது
நாளை ரத்து: கடற்கரை - வேளச்சேரி காலை 5:00, 5:30, 6:00, 6:30, 7:05, 7:25, 7:45 மணி ரயில்களின் சேவை; வேளச்சேரி - கடற்கரை காலை 5:00, 5:30, 6:00, 6:15, 6:35, 6:55 மணி ரயில்களின் சேவை ரத்தாகிறது.
கடற்கரை - ஆவடி காலை 4:05, திருவள்ளூருக்கு 5:10, 5:40, 6:10 மணி ஆவடி - கடற்கரை காலை 4:35, காலை 5:40, காலை 7:05 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது
சிறப்பு ரயில்கள்: வேளச்சேரி - கடற்கரைக்கு நாளை காலை 5:00, 5:30, 6:00, 6:35, 7:00 மணிக்கும், கடற்கரை - வேளச்சேரிக்கு காலை 6:00, 6:30, 7:00, 7:35, 8:00 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன
ஆவடி - அரக்கோணத்துக்கு காலை 5:00, திருவள்ளூருக்கு காலை 6:00, 6:45, 7:05 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக, ரயில்வே தெரிவித்துள்ளது.