Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கண்புரை சிகிச்சைக்கு 15ல் முகாம்

கண்புரை சிகிச்சைக்கு 15ல் முகாம்

கண்புரை சிகிச்சைக்கு 15ல் முகாம்

கண்புரை சிகிச்சைக்கு 15ல் முகாம்

ADDED : பிப் 12, 2024 02:21 AM


Google News
மடிப்பாக்கம்:காஞ்சிபுரம் வடக்கு ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியுடன் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாமை, மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம், 6வது தெருவில் உள்ள சமிதியில் வரும், 15ம் தேதி நடத்துகின்றன.

காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கும் இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் ஏழை, எளியோருக்கு சங்கரா கண் மருத்துவமனையில் விழி,'லென்ஸ்' பொருத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை, போக்குவரத்து வசதி, தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசம்.

விபரங்களுக்கு 97109 10542, 82209 57937 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us