/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஏர் இந்தியா நிறுவன 10 விமானங்கள் ரத்து ஏர் இந்தியா நிறுவன 10 விமானங்கள் ரத்து
ஏர் இந்தியா நிறுவன 10 விமானங்கள் ரத்து
ஏர் இந்தியா நிறுவன 10 விமானங்கள் ரத்து
ஏர் இந்தியா நிறுவன 10 விமானங்கள் ரத்து
ADDED : மே 22, 2025 12:28 AM
சென்னை சென்னை விமான நிலையத்தில், நேற்று 10 விமானங்களின் சேவை ரத்தானதால் பயணியர் பரிதவித்தனர்.
சென்னையில் இருந்து நேற்று மாலை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின், 5:30 மணிக்கு டில்லி செல்லும் விமானம், இரவு 8:35 மணிக்கு கொச்சி, இரவு 9:20 மணிக்கு புனே, 9:45 மணிக்கு டில்லி; இரவு 9:55 மணிக்கு ஹைதராபாத் செல்லும் விமானம் என, ஐந்து புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல், மற்ற நகரங்களில் இருந்தும், சென்னை வரும் ஐந்து விமானங்களையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்தது. இதனால், பயணியர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.