/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
ADDED : ஜூலை 17, 2024 12:27 AM

ஆவடி,
ஆவடி அடுத்த பட்டாபிராமில், கடந்த 2020 முதல் 'டைடல் பார்க்' கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு, கடந்த இரு தினங்களாக, திண்டிவனத்தைச் சேர்ந்த வளர்மதி, 54, என்பவர் சித்தாளாக பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை, வளர்மதி 2வது மாடியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, கழிப்பறை செல்வதாக கூறி சென்றவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
உடன் இருந்தவர்கள், அறை முழுதும் தேடியும் காணவில்லை. சந்தேகத்தின் படி, மாடியில் இருந்து தரை தளத்தில் குப்பை கொட்ட அமைக்கப்பட்ட நுழைவாயில் வழியாக பார்த்தபோது, வளர்மதி அங்கு தவறி விழுந்தது தெரிந்தது.
அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது. பட்டாபிராம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.