ரயிலில் கைவரிசை காட்டிய பெண் கைது
ரயிலில் கைவரிசை காட்டிய பெண் கைது
ரயிலில் கைவரிசை காட்டிய பெண் கைது
ADDED : ஜூலை 05, 2024 12:48 AM
எழும்பூர், தஞ்சாவூரில் இருந்து எழும்பூர் வரை செல்லும், மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூன் 12ம் தேதி, தன்வந்திரி என்ற பெண் பயணித்து உள்ளார்.
ரயில் தாம்பரம் வந்த போது, இவரது எதிரே அமர்ந்திருந்த இளம்பெண், காபி வாங்க செல்வதாகக் கூறியுள்ளார்.
அவரிடம் தன்வந்திரி, தனக்கும் காபி வாங்கி வரும்படி கோரிஉள்ளார்.
இளம்பெண், அந்த காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தன்வந்திரி மயங்கியதும், அவரது மடிக்கணினியை திருடிச் சென்றார்.
அதே போல் ஜூன் 17ல், எழும்பூரில் இருந்து புறப்பட்ட மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில், கண்ணகி என்ற பெண்ணுக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.
பின், தங்க செயின் உள்ளிட்ட நகைகளுடன் தப்பிச் சென்றார். இதுகுறித்து, எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியைச் சேர்ந்த பூமிகா, 23, என்பவர் திருடியது தெரிந்தது.
தனிப்படை போலீசார், நேற்று காலை இவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.