ADDED : ஜூன் 06, 2024 12:23 AM
சென்னை, சென்னை துறைமுகத்தில், இன்று முதல் 9ம் தேதி வரை, 'விண்ட் சர்பிங்' போட்டிகள் நடக்க உள்ளன.
தமிழக செய்லிங் சங்கம் மற்றும் சென்னை செய்லிங் அகாடமி, இந்திய கடலோரக் காவல் படை சார்பில், தேசிய விண்ட் சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான துவக்க விழா நேற்று மாலை, சென்னை துறைமுகத்தில் நடந்தது.
இதில், சென்னை துறைமுக ஆணைய தலைவர் சுனில் பாலிவால், தமிழக, புதுச்சேரி நேவல் ஆபீசர் திங்க்ரா உள்ளிட்டோர், வீரர்களை பதிவு செய்து, கொடியசைத்து இந்த போட்டியை துவக்கி வைத்தனர்.
விண்ட் சர்பிங் போட்டிகள், இன்று முதல் 9ம் தேதி வரை விறுவிறுப்படைய உள்ளன.