/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள் ஷெனாய் நகரில் தொடர் அத்துமீறல் சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள் ஷெனாய் நகரில் தொடர் அத்துமீறல்
சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள் ஷெனாய் நகரில் தொடர் அத்துமீறல்
சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள் ஷெனாய் நகரில் தொடர் அத்துமீறல்
சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள் ஷெனாய் நகரில் தொடர் அத்துமீறல்
ADDED : ஜூலை 11, 2024 12:48 AM

அமைந்தகரைஅமைந்தகரையில் 'நோ பார்க்கிங்' பகுதியில், அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின், அண்ணா நகர் மண்டல அலுவலகம், 102வது வார்டு, அமைந்தகரை பகுதியில், ஷெனாய் நகர் உள்ளது.
இப்பகுதியில் உள்ள புல்லா அவென்யூ மற்றும் அதை சுற்றியுள்ள, 2, 3வது தெருக்கள், கிழக்கு ஷெனாய் நகர் 2வது குறுக்கு தெரு உள்ளிட்ட தெருக்களில் சிலர், அத்துமீறி தனியார் வாகனங்களை, நாள் முழுதும் நிறுத்தி வைத்துள்ளனர்.
குறிப்பாக, போலீசாரால் தடை செய்யப்பட்ட 'நோ பார்க்கிங்' பகுதிகளிலும், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதேபோல், புல்லா அவென்யூவில் உள்ள, சென்னை அரசு பள்ளியின் இருபுறங்களும், ேஷர் ஆட்டோக்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், தினமும் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து மண்டல அதிகாரிகள், அமைந்தகரை போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், அலட்சியமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மண்டல அலுவலகம் அருகில் இதுபோன்று வாகனங்களை நிறுத்தி அட்டூழியம் செய்வதால், அந்த வாகனங்களை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.