/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சக்கர நாற்காலிகள் வைக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை சக்கர நாற்காலிகள் வைக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
சக்கர நாற்காலிகள் வைக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
சக்கர நாற்காலிகள் வைக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
சக்கர நாற்காலிகள் வைக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2024 12:47 AM

கே.கே.நகர், கே.கே.நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் நுழைவாயிலில் இருந்து உள்ளே செல்ல, சக்கர நாற்காலி மற்றும் பேட்டரி வாகனம் இயக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சென்னை கே.கே.நகர் மருத்துவமனை வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில வள மற்றும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
அதே இடத்தில், சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த அலுவலகத்தின் நுழைவாயிலில் இருந்து, 200 மீட்டர் துாரம் நடந்து சென்றால் மட்டுமே, அலுவலகத்தை அடைய முடியும். அலுவலகத்தின் அருகிலேயே, மெட்ரோ ரயில் நிலையமும் உள்ளது.
மூன்று சக்கர ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோவில் வரும் மாற்றுத்திறனாளிகள், நேராக அலுவலக வளாகத்திற்குள் செல்கின்றனர்.
ஆனால், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்தில் வரும் மாற்றுத்திறனாளிகள், இந்த 200 மீட்டர் துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இவர்களுக்கு உதவியாக நுழைவாயில் அருகே, சக்கர நாற்காலி வைக்கப்படவில்லை. மாறாக, அலுவலக கட்டடம் அருகே சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே, அலுவலக நுழைவாயிலில் சக்கர நாற்காலிகள் வைக்கவும், பேட்டரி வாகனம் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.