/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 47,464 பேருக்கு அடையாள அட்டை நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 47,464 பேருக்கு அடையாள அட்டை
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 47,464 பேருக்கு அடையாள அட்டை
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 47,464 பேருக்கு அடையாள அட்டை
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 47,464 பேருக்கு அடையாள அட்டை
ADDED : ஜூலை 18, 2024 12:43 AM
சென்னை, சென்னை மாநகராட்சியில், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை கொண்ட, தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இம்மண்டலங்களில், 3 லட்சம் குடும்பங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் குறித்த பட்டியலை, மாநகராட்சி ஆய்வு செய்தது. அதில், 47,464 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான அடையாள அட்டையை மாநகராட்சி வழங்க உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இத்திட்டத்தின் வாயிலாக, தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் மண்டலங்களில் மழைநீர் துார்வாரும் பணி, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில், 10.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவோருக்கு தினக்கூலியாக 382 ரூபாய் வழங்கப்படும். பணியில் ஈடுபட, 47,464 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.