/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பஸ்சில் பெண்ணை சீண்டிய உ.பி., வாலிபருக்கு தர்ம அடி பஸ்சில் பெண்ணை சீண்டிய உ.பி., வாலிபருக்கு தர்ம அடி
பஸ்சில் பெண்ணை சீண்டிய உ.பி., வாலிபருக்கு தர்ம அடி
பஸ்சில் பெண்ணை சீண்டிய உ.பி., வாலிபருக்கு தர்ம அடி
பஸ்சில் பெண்ணை சீண்டிய உ.பி., வாலிபருக்கு தர்ம அடி
ADDED : ஜூலை 18, 2024 12:27 AM
கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பட்டப்படிப்பு படிக்கிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு, கல்லுாரி முடிந்து, 'தடம் எண்: 29பி' மாநகர பேருந்தில் வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், அதை பயன்படுத்தி வடமாநில வாலிபர் ஒருவர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அப்பெண், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈகா திரையங்கம் நிறுத்தத்தில் சத்தம் போட்டு, வாலிபரை அடித்துள்ளார்.
அப்போது, சக பயணியரும் சேர்ந்து வாலிபரை சரமாரியாக தாக்கி, அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராமு, 25, என்பதும், ஓட்டோரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, தி.நகர் பகுதியில் பெயின்டராக பணிபுரிவதும் தெரிந்தது.
இதையடுத்து, அவர் மீது, பெண் வண்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, நேற்று போலீசார் சிறையில் அடைத்தனர்.