ADDED : ஜூலை 18, 2024 12:27 AM
பெரம்பூர், பெரம்பூரைச் சேர்ந்தவர் கார்த்திக், 30; நகை பட்டறை ஊழியர். இவர், 'ஸ்மால் கிரெடிட்' மொபைல் ஆப் வாயிலாக 7,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பணத்தை 4,500 மற்றும் 2,500 ரூபாய் என, இரண்டு தவணைகளில் கட்டி முடித்துள்ளார்.
ஆனால், சம்பந்தப்பட்ட ஆப்பில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர், கார்த்திக்கிடம் மேலும் 7,000 ரூபாய் செலுத்துமாறு மிரட்டியுள்ளார்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த கார்த்திக், நேற்று முன்தினம் இரவு, டியூப் லைட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.