/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழைநீர் வடிகாலில் கழிவுநீர் சட்டவிரோத இணைப்பு அம்பலம் மழைநீர் வடிகாலில் கழிவுநீர் சட்டவிரோத இணைப்பு அம்பலம்
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் சட்டவிரோத இணைப்பு அம்பலம்
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் சட்டவிரோத இணைப்பு அம்பலம்
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் சட்டவிரோத இணைப்பு அம்பலம்
ADDED : ஜூலை 05, 2024 12:29 AM

சாலிகிராமம், சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில், விடுபட்ட 80 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், மழைநீர் வடிகாலில் விதிமீறி, கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம், 129வது வார்டு சாலிகிராமத்தில், அருணாச்சலம் சாலை உள்ளது.
இச்சாலையில், சினிமா துறை ஸ்டூடியோக்கள், மாநகராட்சி வார்டு அலுவலகம், டாஸ்மாக் மதுக்கடை, தனியார் மருத்துவமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்து உள்ளன.
இதனால், இச்சாலையில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் அருணாச்சலம் சாலையில் மழைநீர் தேங்குவதால், பழைய மழைநீர் வடிகால் உடைக்கப்பட்டு, புது மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இதற்காக, 1 கி.மீ., துாரம் கொண்ட சாலையில், 920 மீட்டர் துாரத்திற்கு புது மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால், ஆற்காடு சாலை சந்திப்பு வரை உள்ள, 80 மீட்டர் துாரத்திற்கு புது மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் உள்ள அடைப்புகளால், வரும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்னை ஏற்படும் என்பதால், 80 துாரத்தில் உள்ள பழைய மழைநீர் வடிகால் உடைக்கப்பட்டு, தற்போது புது மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகள் முடிந்து ஆற்காடு சாலை மழைநீர் வடிகாலுடன் இணைத்தால், மழைக்காலத்தில் மழைநீர் தடையின்றி செல்லும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உடைக்கப்பட்ட பழைய மழைநீர் வடிகாலில், மழைநீருக்கு பதிலாக, கழிவுநீர் பாய்கிறது. இது, மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக, கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.