தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 05, 2024 12:28 AM
சென்னை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், 'நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்' என்ற தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த ஐந்து நாள் பயிற்சி சென்னையில் நடக்கிறது.
ஈக்காட்டுத்தாங்கல், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ., அலுவலக சாலையில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனம் சார்பில் சென்னையில் 'நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்' என்ற தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி, வரும் 8 முதல் 12ம் தேதி வரை, ஐந்து நாட்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள், பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை உள்ளிட்டவை குறித்து விளக்கப்படும்.
ஆர்வமுள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட, 10ம் வகுப்பு கல்வி தகுதியுள்ள ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி வசதிக்கும் தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு 7010143022, 8668102600 ஆகிய மொபைல் எண்களில் அழைக்கலாம்.